விரிவாக்க பணிகளுக்காக வெட்டாமல் மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும்: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மரங்கள் வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அவ்வாறு நடப்படும் மரங்கள் அதிகபட்சமாக 6 மாதங்களில் முழுமையாக அந்த இடத்துடன் பொருந்தி தழைத்து வளர்கின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 182 மரங்கள், பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்காக 216 மரங்கள், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக 148 மரங்கள், மத்திய கைலாஷ் மேம்பாலத்திற்காக 105 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

எனவே, இனிவரும் காலங்களில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் அமைக்கும் போதும், பிற கட்டுமானப் பணிகளின் போதும் அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கையாக அறிவிக்க வேண்டும். உட்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் போதே, கட்டுமான இடத்தில் உள்ள மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு பராமரிப்பதற்கான பணிகளையும் அதன் அங்கமாக சேர்க்க வேண்டும்.

Related posts

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு