கோதுமை ஏற்றுமதி தடை நீட்டிப்பு

புதுடெல்லி: நாட்டில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை தொடரும் என்று இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே மீனா கூறுகையில், ‘‘உள்நாட்டு விநியோகத்திற்கு பிரச்னை இல்லை என்ற நிலை வரும் வரை கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்படவில்லை. உற்பத்தி இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாடு முழுவதும் கோதுமை கொள்முதல் தொடங்கியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் 10,727 டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு