அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த (ரயில் எண் 40201, 40203, 40205, 40207, 40137) இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே (ரயில் எண் 40202, 40204, 40206, 40208, 40210) இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது.
மேலும் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே (ரயில் எண் 40251, 40253, 40255, 40257, 40259) இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை முதல் கூடுவாஞ்சேரி நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே (ரயில் எண் 40252, 40254, 40256, 40258, 40260) இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.