மாஜி ராணுவ வீரருக்கு வெட்டு; எஸ்ஐ இடமாற்றம்

பொன்னை: வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் உமாபதி. இவர் கடந்த 3ம் தேதி பொன்னையாறு அணைக்கட்டு பகுதியில் சிலர் மணல் கடத்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த மணல் கடத்தும் கும்பல் உமாபதியை ஓட, ஓட விரட்டி கொலை வெறியோடு சரமாரியாக வெட்டியது. இதில் உமாபதி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனிசாமியை கைது செய்தனர். பெங்களூருவில் பதுங்கி உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை விரைந்து உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்யக்கோரி தாக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் உமாபதியின் மனைவி நதியா மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று மேல்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காட்பாடி டிஎஸ்பி பழனி வந்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ விஜயகுமார் மணல் கடத்தலை தடுக்க தவறியதால், வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!