தண்டவாளத்தில் உடைப்பு எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

ஒட்டன்சத்திரம்: கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு, நேற்று 500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்த ரயில், காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மார்க்கமாக கிளம்பியது. ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டது.

உடனடியாக லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். அவர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ரயில்வே பணியாளர்கள் தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பின் ரயில் அங்கிருந்து மெதுவாக கிளம்பி சென்றது. லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Related posts

மீண்டும் ஒரு கேலிக்கூத்து

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது