2.5 டன் வெடிபொருள் கேரளாவுக்கு கடத்த முயன்றது அம்பலம்

சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து லாரி ஒன்றில் கடத்தப்பட்ட 2.5 டன் வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை சேலம் கருப்பூர் சோதனை சாவடியில் வைத்து 2 நாட்களுக்கு முன்பு போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து லாரி டிரைவர் இளையராஜாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது, லாரியை கோவைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் அங்கு கார்த்திக் என்பவர் செல்போனில் அழைப்பார் என்றும் கூறினார்.

இதையடுத்து அவரை சிறையில் அடைத்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கார்த்திக்கை தேடி வருகின்றனர். இந்தநிலையில் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் 2.5 டன் வெடிபொருட்கள் கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்து. பின்னர் வெடிபொருட்கள் தமிழ்நாடு மேக்னசைட்டில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை