சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

திருவொற்றியூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள்-மாமன்ற உறுப்பினர்களின் பணிகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் விதம், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாடுகள் போன்ற சென்னை மாநகராட்சியின் பணிகள் குறித்து முதுகலை சமூகவியல் படிக்கும் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், கவுன்சிலர்,அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை திருவொற்றியூர் 7வது வார்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் தலைமை வகித்தார். இதில் அதிநவீன முறையில் ஒளிப்பட கருவி மற்றும் கணினி மூலமும் சென்னை மாநகராட்சி பணிகள் குறித்தும் பொதுமக்களை மாமன்ற உறுப்பினர்களை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்தும் கே.கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாணவ – மாணவியருக்கு விளக்கினர்.

மேலும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், பாதாள சாக்கடை, சாலை வசதிகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு எப்படி உதவ முடியும் என விளக்கி கூறப்பட்டது. இதன்பின்னர் மக்களை நேரடியாக சந்தித்த மாணவர்கள் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.‘’இந்த கலந்தாய்வு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. தங்களுடைய முதுகலை பாடத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது’ என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

வேண்டாமே கலர்ஃபுல் உணவுகள்!

மீ டைம்!

திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு