குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நான்கு வழி சாலை பணி குறித்து சட்டப்பேரவையில் விளக்கம்!

கன்னியாகுமரி: “குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நான்கு வழி சாலை பணியை உடனடியாக துவங்க வேண்டியது குறித்து விவாதிக்க கோரியது” தொடர்பான பதிலறிக்கை. சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டு உள்ள கன்னியாகுமரி – கேரள எல்லை சாலை (தே.நெ-47 – புதிய எண்.66) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சார்ந்ததாகும்.

இச்சாலையை நான்கு வழித்தடமாக்குவதில் மொத்தமுள்ள சுமார் 53 கி.மீ. நீளத்தில், நிலம் கையகப்படுத்தப்பட்ட 30 கி.மீ. நீள சாலைப்பகுதி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளுக்கு தேவையான கிராவல் மண் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டப் பகுதி மற்றும் வனப்பகுதி நிலங்களிலிருந்து கிடைக்கப் பெறாத காரணத்தினால், இப்பணிக்கான ஒப்பந்த உடன்படிக்கையானது ரத்து செய்யப்பட்டது.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் (16.12.2021) அன்று நடத்தப்பட்ட எனது ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராவல் மண் எடுக்க இயலாத காரணத்தால், அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து கிராவல் மண் எடுத்து மீதமுள்ள பணிகளை செயலாக்க தேவையான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன்படி, மீதமுள்ள சாலைப் பணிகள் மேற்கொள்ள, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ரூ.1041 கோடி மதிப்பில் பணி நியமன ஆணை (31.3.2023) அன்று வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நில எடுப்பு பணிகள், நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள இனங்கள் தவிர, இதர பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் பணி துவங்க உள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்