ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2021 ஜனவரி 20ம்தேதி பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பெரும் படையோடு பாஜவில் இணைந்தவர் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர். பாஜவை சேர்ந்த முக்கிய நபருக்கு மாமல்லபுரம் ரிசார்ட் ஒன்றில் மதுவிருந்துடன் நடந்த விழாவில் தாதா சீர்காழி சத்யா ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

கொடூரமான கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை பாஜவில் சேர்த்து புகலிடம் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பாஜ எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பாஜவுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்