காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்கு..!!

சென்னை: காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸ், அவரது மனைவி மீது சைதை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகத்தை சைதாப்பேட்டையில் காளிதாஸ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடையில் காலாவதியான மருந்துகள் விற்பதாகவும், விதிமீறல் நடப்பதாகவும், மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் வந்தன.

புகாரின் மீது மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காலாவதியான மருந்து விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், மருந்து கட்டுப்பாடு மற்றும் காஸ்மெடிக் சட்டங்களின் விதிகளை மீறிய பிரிவின் கீழ் பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு சைதை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காளிதாஸ் மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!