பிரிஜ் பூஷனை எப்போது பாஜவில் இருந்து வெளியேற்றுவீர்கள்?..பிரதமர் மோடிக்கு காங். கேள்வி

புதுடெல்லி: பிரிஜ் பூஷனை எப்போது கட்சியில் இருந்து வெளியேற்றுவீர்கள் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாஜ எம்பி மற்றும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 15ம் தேதி போலீசார் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரின்டே கூறுகையில்,‘‘மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? பிரதமர் மோடி எப்போது பிரிஜ் பூஷனை பாஜவில் இருந்து வெளியேற்றுவார்? எப்போது அவர் கைது செய்யப்படுவார்? பிரிஜ் பூஷனுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு அளிப்பதை மோடி அரசு எப்போது நிறுத்தும்? எதிர்கட்சிகளிடம் இருந்து இல்லை ஆனால் இந்தியாவின் மகள்களிடம் இருந்து நீங்களும் உங்களது அரசும் சோதனையை எதிர்கொண்டுள்ளீர்கள்” என்றர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி