கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரம்; மாஜி பார்ட்னரின் வீட்டிற்குள் நுழைந்து மிரட்டல்: திரிணாமுல் பெண் எம்பி மீது புகார்

புதுடெல்லி: திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா, தனது முன்னாள் பார்ட்னரின் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மஹுவா மொய்த்ராவின் முன்னாள் நெருங்கிய நண்பரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் டெஹாத்ராய், டெல்லி ஹவுஸ் காஸ் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘நாடாளுமன்ற நெறிமுறைக் குழு முன் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஜரானார். அன்றிரவு எனது வீட்டிற்குள் திடீரென நுழைந்தார். அப்போது எனது வீட்டில் இருந்த ஊழியர்களை மிரட்டினார்.
ஏற்கனவே நான் அவரை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார்.

தற்போது மீண்டும் என் மீது புகார் அளித்துள்ளார். எனக்கு எதிராக மேலும் பல புகார்களை பதிவு செய்யும் நோக்கில் தான், வேண்டுமென்றே அவர் எனது வீட்டிற்குள் ஒருவாரத்தில் இரண்டு முறை அத்துமீறி நுழைந்துள்ளார். அவரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவ்விகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு