அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்: கலெக்டர் தகவல்


திருவள்ளூர்: அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தில், மாதந்தோறும் ₹1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற்று வந்தநிலையில், தற்போது 2024-2025ம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ₹1,000 வழங்க இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கணக்கு தொடங்கி, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்ட கண்காணிப்பு அலுவலர் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

மிரட்டி பணம் பறித்த வழக்கு நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கால்வாய்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ₹2 லட்சம் அபராதம்

இங்கிலாந்து பிரதமருக்கு எதிர்ப்பு தொழிலாளர் கட்சி எம்பி ராஜினாமா