உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன்: அமைச்சர் உதயநிதி

சென்னை: உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். விளையாட்டுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலகில் எவ்வித விளையாட்டுகளிலும் தமிழக மாணவர்கள் வெற்றி காணும் வகையில் உருவாக்கப்படுவார்கள். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெட்ரா வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்

உடல் உடற்பயிற்சி (PE) ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் இது அனைத்து மாணவர்களின் தினசரி வழக்கத்திலும் இணைக்கப்பட வேண்டும். பள்ளி அமைப்பில் உடல் செயல்பாடு பரந்த அளவிலான நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது, மேம்பட்ட உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலனில் இருந்து அதிகரித்த கல்வி செயல்திறன் மற்றும் சிறந்த சமூக திறன்கள் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது

உடற்கல்வியானது உடலை உன்னதமான முறைகளில் இயக்குகிறது.உடலின் வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வளர்க்கிறது. தேகத்தின் திறனை மிகுதிப்படுத்துகிறது. ஒழுக்கமான பண்புகளில் ஊட்டத்தை அளித்து, உற்சாகத்துடன் கடைபிடிக்கச் செய்கிறது. சமூகத்தில் தகுதி வாய்ந்தவராக, தரம் மிகுந்தவராக, ஒத்துப் போகின்ற உரமான உள்ளம் கொண்டவராக, எந்த நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்கும் நேரியராக உருவாக்கும் நிலைமையை உடற்கல்வி ஏற்படுத்தி, வளம் கொடுக்கிறது.

பள்ளிகளில் மாணவர்களை படிக்க வைப்பது மட்டும் ஆசிரியரின் பணி அல்ல. உடற்பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் இல்லாத நேரங்களில் வேறு பாட ஆசிரியகள் அந்த உடற்பயிற்சி வகுப்புகளை கேட்டு வாங்க வேண்டாம் என்றும் மாணவர்களின் திறமைகளை உடற்பயிற்சி வகுப்புகளில் தான் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். உலகில் எவ்வித விளையாட்டுகளிலும் தமிழக மாணவர்கள் வெற்றி காணும் வகையில் உருவாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு