விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் பானை கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் 2ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் உள்ள மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் வடக்கு கரையோரம், 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

இங்கு தோண்டப்பட்டுள்ள 15 குழிகளில் தற்போது வரை சுடுமண் ஆட்டக்காய்கள், சுடுமண் விளையாட்டுப் பொருட்கள், சுடுமண் உருவங்கள், அடித்தளம், நுண்கற்கால மூலப்பொருட்கள், சுடுமண் பதக்கங்கள், வட்டச்சில்லுகள், புகைப்பான்கள், பானைகள், கிண்ணங்கள், கண்ணாடி மணிகள், வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விஜயகரிசல்குளத்தில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் முழு உருவ வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணாலான பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,200க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை