தேர்வு நேரத்தில் விடுமுறை எடுத்த மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

வேலூர்: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. இதை யொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டங்கள் தோறும் வினாத்தாள்கள் அந்தந்த கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வினாத்தாள்கள் வரும் நேரத்தில் அதனை வாங்கி வைக்க வேண்டிய அதிகாரியாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேர்வுதாள் வரும் நாளில், கல்வி துறை உத்தரவையும் மீறி மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா விடுமுறை எடுத்துள்ளார். தேர்வு நேரத்தில் விடுமுறை எடுத்து தேர்வு பணியை சரிவர செய்யாமல் பணியில் மெத்தனம் காட்டிய காரணத்திற்காக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபாவை சஸ்பெண்ட் செய்து, கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்