இவிஎம் முறைகேடு அச்சம் நீக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

லக்னோ: உபி மாநிலம் லக்னோவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மின்னணு எந்திர முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறுகையில்,’ அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அதன் முகவர்களுக்கு எந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடி மையத்திற்கு எந்த இவிஎம் சென்றுள்ளது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த இவிஎம் பயிற்சிக்கு சென்றுள்ளது என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அவர்களின் அனுமதியின்றி எந்த ஒரு இவிஎம் வைக்கப்பட்டுள்ள அரங்கையும் திறக்க முடியாது. அரசியல் கட்சிகள் இல்லாமல் எந்த நடைமுறையும் இல்லை. வாக்குப்பதிவுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இவிஎம்மில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த தகவல் வாக்குச் சாவடி முகவரிடம் கிடைத்து, வாக்கு எண்ணும் செயல்முறைக்கு முன்பாக அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு; இந்தியாவால் தேடப்படும் மத போதகருக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

ஒன்றிய தொல்லியல்துறைக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா