யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, டென்மார்க்

 

கொலோன்: ஜெர்மனியில் நடைபெறும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று சி பிரிவில் உள்ள அணிகள் களம் கண்டன. கொலோன் நகரில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து – சுலோவேனியா அணிகள் மோதின. சி பிரிவில் இங்கிலாந்து முதல் இடத்தில் இருந்தாலும் குறைந்தபட்சம் டிரா செய்தால்தான் அடுத்த சுற்று வாய்ப்பு உறுதி என்ற நிலையில் சுலோவேனியாவை எதிர் கொண்டது. சுலோவேனியாவுக்கும் வாய்ப்பு இருந்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. பெரும்பாலும் பந்து இங்கிலாந்து வசம் இருந்தாலும், சுலோவேனியா வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் உறுதியாக இருந்ததால் இப்போட்டி 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

மியூனிக்கில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் – செர்பியா பலப்பரீட்சையில் இறங்கின. இந்த போட்டியும் 0-0 என கோல் ஏதுமின்றி டிராவானது. லீக் சுற்றின் முடிவில் இரு அணிகளுமே தலா 3 புள்ளிகள் பெற்றிருந்ததுடன் (தலா 3 டிரா)… அடித்த, வாங்கிய கோல் அடிப்படையிலும் இரு அணிகளிடையே எந்த வித்தியாசமும் இல்லை. தரவரிசை அடிப்படையில் டென்மார்க் அணிக்கு 2வது இடம் வழங்கப்பட, அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மேலும், அதிக புள்ளிகளுடன் 3வது இடம் பிடிக்கும் அணிகளுக்கும் நாக் அவுட் சுற்று வாய்ப்பு என்பதால் மற்ற பிரிவுகளில் 3வது இடம் பிடிக்கும் அணிகள் முடிவாகும் வரை ஸ்லோவேனியா காத்திருக்க வேண்டும்.

Related posts

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்