யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி

கொலோன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் விளையாட ஸ்பெயின் அணி தகுதி பெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் – ஜார்ஜியா அணிகள் நேற்று மோதின. முன்னாள் சாம்பியனுக்கு உரிய வேகத்துடன் ஆடத் தொடங்கிய ஸ்பெயின், பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. எனினும், 18வது நிமிடத்தில் ஜார்ஜியா வீரர் அடித்த பந்து ஸ்பெயின் வீரர் நோர்மண்ட் மீது பட்டு ‘ஓன் கோல்’ ஆக அமைய, ஜார்ஜியா 1-0 என முன்னிலை பெற்றது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஸ்பெயின் தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன் பலனாக 39வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ரோட்ரி கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.

2வது பாதியில் ஜார்ஜியா கோல் பகுதியை முற்றுகையிட்டு அலை அலையாய் தாக்குதல் நடத்திய ஸ்பெயின் அணிக்கு 51வது நிமிடத்தில் ஃபேபியான், 75வது நிமிடத்தில் வில்லியம்ஸ், 83வது நிமிடத்தில் ஒல்மோ ஆகியோர் அடுத்டுத்து கோலடித்து அசத்தினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 3முறை யூரோ சாம்பியனான ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்