இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் 1038 துணை மருத்துவ பணிகள்

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1038 துணை மருத்துவ பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Para Medical Posts. மொத்த காலியிடங்கள்- 1038. இவற்றில் தமிழ்நாட்டில் 56 காலியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இடஒதுக்கீடு விவரம்:
1ECG Technician: 6 இடங்கள் (ஒபிசி- 4, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இசிஜி டெக்னீசியன் பாடத்தில் 2 வருட டிப்ளமோ. சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 18 முதல் 25க்குள்.

2Junior Radiographer: 17 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 18 முதல் 25க்குள்.

3O.T. Assistant: 10 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு மருத்துவமனையி்ல் O.T. அசிஸ்டென்டாக ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 32க்குள்.

4Pharmacist: (Allopathic): 4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று D.Pharm/B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் ப டிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 32க்குள்.

5Pharmacist (Ayurveda): 2 இடங்கள் (பொது). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆயுர்வேதா பார்மசியில் டிப்ளமோ/பட்டப்படிப்பை முடித்து ஆயுர்வேத பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 18 லிரு்து 32க்குள்

6Radiographer: 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் 2 வருட டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 18 லிருந்து 25க்குள்.

7Junior Medical Lab Technologist: 15 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் DMLT படிப்பை முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 18 லிருந்து 25க்குள். விண்ணப்பதாரரின் வயது வரம்பு 30.10.2023 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும்,

மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ₹250/-). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, விண்ணப்பதாரரின் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வானவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். www.esic.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2023

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை