கர்நாடக பாஜவில் கோஷ்டி மோதல் மகனுக்கு சீட் கிடைக்காததால் ஈஸ்வரப்பாவுக்கு என் மீது கோபம்: எடியூரப்பா ஆதங்கம்

ஷிவமொக்கா: கா்நாடக மாநில பாஜ மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தனது மகன் காந்தேஷூக்கு சீட் கேட்டிருந்தார். இவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்காவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேட்சையாக நிற்கப்போவதாக அறிவித்துள்ளார். ஷிவமொக்காவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் ஈஸ்வரப்பா பங்கேற்கவில்லை.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘ ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. மகனுக்கு சீட் கிடைக்காததால் ஈஸ்வரப்பா என் மீது கோபமாக இருக்கிறார். அவருக்கு என்னைப் பற்றி தவறான எண்ணம் தோன்றிவிட்டது. பாஜவை கட்டியெழுப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தவர். அவரை சமாதானப்படுத்துவோம். என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’ என்றார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு