ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற சிறுத்தையால் பரபரப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாக உள்ளது. இது சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் இந்த வலைத்தளம் செல்கின்றது. இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, மண், கரடி உள்ளிட்ட ஏரளமான வன விலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. புலிகள் காப்பகத்தில் நடுவே செல்லும் இந்த திம்பம் மலைப்பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாகவே மலை பாதையில் வெளிமாநில வாகனங்களுக்கு இரவு நேர போக்குவரத்து, தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநாள் இந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக இருபுறம் உள்ள வன பகுதியில் இருந்து வன விலங்குகள் அதிகமாக சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை திம்பம் மலைப்பகுதி ஒட்டியுள்ள வன பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, சாலையை கடந்து மெதுவாகவும், கம்பிரமாகவும் நடந்து சென்றது. இந்த கட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் வாகனத்தை நிறுத்தி அதை வீடியோ எடுத்து அதனை சமூக வழித்தடங்களில் பதிவிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகளை பார்த்த சிறுத்தை சிறுது நேரத்தில் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எந்த காரணத்தை கொண்டும் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எனவும், வன விலங்குகள் அதிகமாக நடமாடுவதால் அதிக ஆபத்து உள்ளது எனவும், வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு