ஈரோடு மார்க்கமாக ம.பிக்கு ரூ.700 கோடி ரயிலில் சென்றது

ஈரோடு: கேரளாவில் இருந்து ம.பிக்கு ஈரோடு மார்க்கமாக ரயிலில் ரூ.700 கோடி பணம் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு கொச்சுவேலி இந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கியின் ரூ.700 கோடி ரொக்கம், ரயிலின் கடைசி கூட்ஸ் கேரியர் பெட்டியில் பூட்டி சீலிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக சென்றனர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில்வே போலீசாரும் ரயில் பெட்டிக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியாது என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி