ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பிவிசி பைப் மொத்த விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரோடு பேருந்து நிலையம் அருகே சக்தி சாலையில் பரணி பைப்ஸ் மொத்த விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வழக்கம் போல பணியாளர்கள் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடையை ஒட்டி பின் புறம் உள்ள கிடங்கில் திடீரென தீ பிடித்து எறிய தொடங்கியுள்ளது. இதனை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அதற்கு பின் கிடங்கில் பற்றிய தீ மலமலவென கிடங்கு முழுவதும் பரவியது. தொடர்ந்து முன்பாக உள்ள கடையிலும் தீ பிடித்து எறிந்தது. முழுமையாக பிவிசி பைப் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரனங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

பிவிசி குழாய்களில் பற்றிய தீயானது கரும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் வந்த ஈரோடு தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 30 நிமிடங்களுக்கு தீயை அணைக்குபணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு