கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!

உதகை: கடந்த மே 7ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை 1,09,675 வாகனங்களும்,7,14,811 சுற்றுலாப்பயணிகளும் கொடைக்கானலுக்கு வந்து சென்றதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் முறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு