“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” – தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள், அடிப்படைகள், சந்தைப்படுத்துதல், பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள், ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை பற்றி விளக்கப்படும். இப்பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு. இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதி உள்ளது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in < http://www.editn.in > என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 7010143022 / 8668102600. முன்பதிவு அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்