கோவை வேளாண் பல்கலை. முதுநிலை நுழைவுத் தேர்வு திடீர் ரத்து: மாணவர்கள் அதிர்ச்சி!

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு திடீர் ரத்து செய்யபப்ட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை. முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்வர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025-ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து; மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை.யின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ல் நடைபெற்றது. தொழில்நுட்பக் கோளாறு, சாஃப்ட்வேர் பிரச்சனைகள் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும்.

இளநிலை படிப்பு செப்டம்பரில் முடியும் நிலையில் அந்த மாத இறுதியிலேயே முதுநிலை படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும். மாணவர் சேர்க்கை தாமதமின்றி நடைபெறும் என்றும் கூறினார். முதுநிலை நுழைவுத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

கனமழை எச்சரிக்கை எதிரொலி: நீலகிரியில் 2 வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றம்