பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய கல்வி வளர்ச்சியே காரணம்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர்: பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருவதற்கு கல்வி வளர்ச்சி தான் காரணம் என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 796 அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 2,083 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழங்கினர்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘இந்தியாவில் தமிழகம் தான் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருவதற்கு கல்வி வளர்ச்சி தான் காரணம். விருதுநகர் மாவட்டம் கல்வியில் கால் நூற்றாண்டாக அனைத்து குறியீடுகளிலும் சிறப்பான இடத்தில் உள்ளது’’ என்றார்.

Related posts

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்