வாய்ச்சவடால் போதும் மணிப்பூரில் அமைதி திரும்ப முன்னுரிமை: மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடையே அதன் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் போக்கு காணப்படுவது நல்லதல்ல. பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். கடந்த ஓராண்டாகவே மணிப்பூர் மாநிலம் அமைதிக்காகக் காத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் வாய் சவடால்களை விட்டு விட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார். இதற்கிடையே வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு சென்ற அம்மாநில முதல்வர் பைரன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்