எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை மட்டுமே குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார்கள்: சிபிசிஎல் நிறுவனம்

எண்ணூர்: எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை மட்டுமே குற்றவாளியாக சித்தரவிக்கப்படுவதாக சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்தது அப்போது எண்ணெய் கலப்பிற்கு சி.பி.சி.எல் நிறுவனம் மட்டுமே காரணம் என்றும் அந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து பேசிய சி.பி.சி.எல் தரப்பு வழக்கறிஞர் ஆயில் கலந்த விவகாரத்தில் தங்கள் நிறுவதை மட்டுமே குற்றவாளியாக தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறது என்றும் அங்குள்ள மற்ற நிறுவனங்கள் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சி.பி.சி.எல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பல மீனவ கிராமங்களில் உள்ள மாங்குரோவ் காடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பறவைகள் பறப்பதற்கு சிரமப்படுகின்றன என்றும் புகைப்படங்களை காட்டி மீனவர்கள் வாதிடப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் கடும் வாதம் தெரிவித்த நிலையில் இது குறித்து முழுமையான ஆய்வு அறிக்கை வரும் 21ம் தேதி அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அதே தேதிக்கு ஒத்திவைத்தனர். பசுமை தீர்ப்பாயத்தில் கேடு முடிவடைந்த நிலையில் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. எண்ணூர் முகத்துவரப்பகுதியில் தேங்கிய எண்ணெய் கழிவுகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் அளித்த கேடு முடிவடைந்தது இருப்பினும் எண்ணெய் அகற்றும் பணி 8வது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒடிசா,மும்பை, ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ள வல்லுநர் குழுக்களும் மீனவர்கள் சி.பி.சி.எல் ஊழியர்கள் என 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் கோசஸ் தலை எண்ணூர் முகத்துவாரம் காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் 625மீட்டர் மிதவை பூம்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகள் கடலில் களப்பாமல் இருக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளன என்று மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related posts

காலாவதியான மருந்து விற்றதாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர், அவரது மனைவி மீது வழக்கு..!!

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து