ஆங்கில பள்ளி மோகம் தற்கொலைக்கு சமம்: என்சிஇஆர்டி தலைவர் சொல்கிறார்

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) தலைவர் டி.பி. சக்லானி கூறியதாவது: பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும், ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது. அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை திணிக்கும் பழக்கம் குழந்தைகளிடையே அறிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. அதோடு, அவர்களின் வேர்கள் மற்றும் கலாச்சாரத்திலிருந்து அவர்களை விலக்குகிறது. தாய்மொழி வழி கற்றல் ஏன் ஆழமாக இருக்க வேண்டும்? ஏனென்றால், நமது சொந்த தாயை, நமது வேர்களை புரிந்துகொள்ளாதபோது மற்றதை எப்படி புரிந்துகொள்ள முடியும்? பன்மொழி அணுகுமுறை என்பது எந்த மொழியிலும் அனைத்து பாடங்களையும் கற்பிப்பது அல்ல. அது முடிவுக்கு வர வேண்டும். மாறாக, பல மொழிகளை மொழி வழியாக கற்க வேண்டும். நாம் ஆங்கிலத்தில் திணறத் தொடங்குவதால், அறிவு இழப்பு ஏற்படுகிறது. மொழி ஒரு செயல்படுத்தும் காரணியாக இருக்க வேண்டும். மாறாக, செயலிழக்க வைக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. இதுவரை நாம் முடக்கப்பட்டிருந்தோம். இப்போது பன்மொழிக் கல்வியின் மூலம் நாம் நம்மை செயல்படவைக்க முயல்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-தென்ஆப்ரிக்கா பைனலில் இந்தியா பேட்டிங் தேர்வு