இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளி பரிசாக கோலி கையெழுத்திட்ட ‘பேட்’: வெளியுறவு அமைச்சர் வழங்கினார்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளி பரிசாக கோலி கையெழுத்திட்ட பேட் ஒன்றை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார். உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 9 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 15ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். அவருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தீபாவளி பரிசாக விராட் கோலி கையெழுத்திட்ட ‘பேட்’ ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த பேட்டை கையில் வாங்கிய சுனக்கின் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.

முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது மனைவியுடன் லண்டனின் டவுனிங் தெருவில் வசிக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா ஆகியோரை சந்தித்து, பிரதமர் மோடி சார்பாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அவருக்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டையும், விநாயகர் சிலையையும் வழங்கினார். இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், ‘இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை தீபாவளியன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பிரதமர் மோடி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவும் இங்கிலாந்தும் சமகால உறவுகளை மறுசீரமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு