பிரதமர் பதவியை இழக்கிறார் ரிஷி சுனக்: இங்கிலாந்தில் ஆட்சி அமைக்கிறது தொழிலாளர் கட்சி


பிரிட்டன்: இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவியது

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்; பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 326 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 326 தொகுதிகளை கைப்பற்றியதால் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 70 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராகிறார்.

2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்ததை பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டார். கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என்று கூறினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்ய உள்ளார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்