மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தின் பியூமண்ட் சாதனை


பெல்பாஸ்ட்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 16.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் அபாரமாக ஆடி 150 ரன்கள் குவித்த இங்கிலாந்தின் பியூமண்ட் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள்(10) அடித்த வீராங்கனைகள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங்(15) மற்றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் உள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்