செப்டம்பர் 11 வரை பொறியியல் படிப்பு கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அதிகளவில் சேர்த்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்லாது அரசு கல்லூரிளிலும் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செப்டம்பர் 11-ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும். ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரி பயில கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. “நான் முதல்வன்” போன்ற திட்டங்களால் வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது எனவும் கூறினார்.

Related posts

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு