இன்ஜினியரிங் 2ம் கட்ட கவுன்சலிங் தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடந்து வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்கி 26ம் தேதியுடன் முடிந்தது. சிறப்பு பிரிவு மாணவர்களைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்
படுகிறது. முதல்சுற்று கலந்தாய்வில் 16 ஆயிரம் இடங்கள் நிரம்பின. பொதுப்பிரிவு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவு, தொழிற்கல்வி பிரிவில் 16 ஆயிரத்து 64 இடங்கள் நிரம்பின.

இதையடுத்து 2வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தற்காலிக ஒதுக்கீடு, அதனை உறுதி செய்து, இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக பொதுப் பிரிவில் விண்ணப்பித்த 64 ஆயிரத்து 288 மாணவ-மாணவிகளுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 7 ஆயிரத்து 511 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், கலந்தாய்வில் பங்கேற்றுள்ள 442 கல்லூரிகளில் 193 கல்லூரிகளில் ஒரு இடங்கள் கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு