ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையாக, சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கான இறுதி வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 15ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை