பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வு இசிஇ, ஐடி, ஏஐ ஆகிய படிப்புகளை அதிகம் தேர்வு செய்த மாணவர்கள்

சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. அண்ணா பல்கலையின் கீழ் வரும் 433 கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு முதலில் நடந்தது. 836 பேர் சேர்ந்தனர். தொடர்ந்து பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வும் தொடங்கியது. கடந்த 29ம் தேதி முதல் சுற்று கலந்தாய்வு ஆரம்பித்து, நேற்று முன்தினம் முடிந்தது.

விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு ஆணை ஒதுக்குதல், அதனை உறுதி செய்தல், இறுதி ஒதுக்கீடு ஆணை அல்லது தற்காலிக ஒதுக்கீடு ஆணையை ஏற்றுக்கொள்ளுதல், கல்லூரிகளில் சேருதல் என்ற அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடக்கிறது. இதை தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு முதல் சுற்று கலந்தாய்வில் கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்ட படிப்புகளாக உள்ளது.

இவை தவிர எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இசிஇ) ஆகியவையும் மாணவர்களின் விருப்ப பாடமாக உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உண்டாகும் என மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற முக்கிய கோர் படிப்புகளை படிப்பவர்கள் குறைவாக உள்ளனர். அதே சமயம் அண்ணா பல்கலை வளாகங்களில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி (சிஇஜி) ஆகியவை மாணவர்களின் தேர்வாக உள்ளது.

படிப்புகள்-மொத்த இருக்கைகள்-நிரப்பப்பட்ட இருக்கைகள்

சிஎஸ்இ 44,589 6,490

ஐடி 15,638 2,014

இசிஇ 22,857 2,967

ஏஐ, டேட்டா சயின்ஸ் 17,310 2,046

இஇஇ 14,016 941

மெக்கானிக்கல் 16/592 701

சிவில் 9,482 377

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்