இன்ஜி. முதற்கட்ட கலந்தாய்வு செப்.3ம் தேதியுடன் நிறைவு

சென்னை: இன்ஜினியரிங் முதற்கட்ட கலந்தாய்வு வரும் செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி, கடந்த 9ம் தேதியுடனும், 2வது சுற்று கலந்தாய்வு கடந்த 9ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடனும் நிறைவு பெற்றது. இந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில், 56 ஆயிரத்து 837 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதை தொடர்ந்து 3வது சுற்று கலந்தாய்வு கடந்த 22ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கலந்தாய்வு பொதுப் பிரிவில் 89 ஆயிரத்து 695 பேர் அழைக்கப்பட்டு, 62 ஆயிரத்து 232 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 55 ஆயிரத்து 648 பேருக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் 19 ஆயிரத்து 280 பேர் அழைக்கப்பட்டு, அவர்களில் 12 ஆயிரத்து 19 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். இவர்களில் 5 ஆயிரத்து 319 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 3வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3ம் தேதியுடன் நிறைவுபெறுவதன் மூலம், முதற்கட்ட இன்ஜினியரிங் கலந்தாய்வு அன்றைய தினத்துடன் முடிகிறது.

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை