அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி புதிதாக இரன்டு மனுக்கள் தாக்கல் செய்யபட்டன.
வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 2 வரை நீட்டித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது