அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டு இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

பெருங்குடி மண்டல குழு கூட்டம்; வாட்ஸ்அப் குழு உருவாக்கி பணிகளை முடிக்கவேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேச்சு

ஜம்மு-காஷ்மீர், அரியானா தேர்தல் நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு: பட்ஜெட்டில் அறிவிக்காத நிலையில் திடீர் ஒப்புதல்

நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஹேமா கமிட்டி முழு அறிக்கை விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு: முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை பாயுமா?