அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் அடைத்ததை எதிர்த்த ஜாபர் சாதிக் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போதைப் பொருளை கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி ஜாபர் சாதிக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகினார்அமலாகக்த்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஜாமீன் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திஹார் சிறை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோரலாம். ஆனால் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். இதையடுத்து, ஜாமீன் வழங்கிய பின்னர் வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதற்காக சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்