சீனாவுக்கு ரூ.82 கோடி அனுப்பிய நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: சீனாவுக்கு ரூ.82 கோடி அனுப்பிய பெங்களூரு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பெங்களூரு நகரில் ஓடா கிளாஸ் என்ற பெயரில் ஆன்லைன் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது. சீனா மற்றும் கேமன் தீவுகளில் இருந்து இந்த நிறுவனம் கட்டுப்படுத்தப்படுவதும், இங்கிருந்து அந்நிய செலவாணி மேலாண்மை சட்ட விதிமுறைகளை மீறி ரூ.82 கோடி சீனாவுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி