கேரளாவில் அமலாக்கத்துறை சோதனை ரூ.2.90 கோடி வெளிநாட்டு கருப்புப் பணம் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.90 கோடி வெளிநாட்டு, கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 3 வருடங்களில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஹவாலா பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக மத்திய அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம் உள்பட 14 இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

செல்போன், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதனப் பொருட்கள், ஜவுளி ஆகிய மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் உள்பட பல நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 19ம் தேதி இரவு தொடங்கிய இந்த சோதனை மறுநாள் இரவு வரை நடைபெற்றது. இந்நிலையில் இந்த சோதனை குறித்த விவரங்களை மத்திய அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் பெருமளவு வெளிநாட்டு மற்றும் கருப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.1.50 கோடி மதிப்பிலான 15 நாட்டு வெளிநாட்டு பணம், ரூ.1.40 கோடி கருப்புப் பணம், 50 செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்