நாடாளுமன்ற கூட்டம் முடித்துவைப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக குடியரசு தலைவர் முர்மு அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு முடிவடைவதால் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கியது.

இதில் 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவை கடந்த 21ம் தேதியும், மக்களவை கடந்த 22ம் தேதியும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் குளிர்கால கூட்டத்தை முடித்து வைப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று அறிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு