வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை: டிஆர்ஓ வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமான ஆணையை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சுமார் 85 நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1857 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 346 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், 340 நபர்கள் 2ம் கட்ட நேர்காணலுக்கு தேர்வாகி உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் அருணகிரி, பொறியியல் கல்லூரி முதல்வர் மோகன்ராஜ், திருமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், திருமலை பாலிடெக்னிக் கல்லூரி பணி நியமன அலுவலர் அருண்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்கள், வேலை நாடுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் 15 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021ம் ஆண்டு முதல் 2024 ஜனவரி வரை 125 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும், 14 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 15,341 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 63 நபர்கள் அரசுப்பணியில் இணைந்துள்ளனர். மேலும், இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து வேலை நாடுநர்களுக்கும் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு