ரேஷன் பொருள் விநியோகத்தை சீர்செய்ய எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் நேற்று கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் மூன்று மாதமாக துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்ற மாதமே ரேஷன் பொருட்கள் விநியோகத்தை சீர்செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்தேன்.

முறையாக கொள்முதல் செய்து விநியோகிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது, ஏழை மக்களின் எண்ணங்கள் அறிந்த எந்த ஒரு அரசும் ரேஷன் தட்டுப்பாடு நிகழ விட்டிருக்காது. ரேஷன் பொருட்களின் விநியோகத்தில் கவனம் செலுத்தி, அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை