அவசரநிலை குறித்த பேச்சு; சபாநாயகரின் பதவிக்கு அழகல்ல: சரத் பவார் கண்டனம்


கோலாப்பூர்: மக்களவையில் கடந்த 26ம் தேதி பேசிய மக்களவை தலைவர் ஓம் பிர்லா, “இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை கண்டித்து தீர்மானம் வாசித்தார். இந்நிலையில் நேற்று கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார், “அவசரநிலை கொண்டு வரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திரா காந்தி இப்போது உயிருடன் இல்லை.

அப்படியிருக்க அந்த பிரச்னையை சபாநாயகர் இப்போது ஏன் கொண்டு வர வேண்டும்? அரசியல் அறிக்கை வௌியிடுவதா ஒரு சபாநாயகரின் வேலை? அவரது இந்த பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு பொருந்தாது” என்று தெரிவித்தார்.

Related posts

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்

வெண்மணி இணையர் சாவித்ரி மறைவு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களாக 133 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்