இ- லூனா என்ற எலக்ட்ரிக் மொபெட் விரைவில் அறிமுகம்

கைனடிக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான கைனடிக் கிரீன், இ- லூனா என்ற எலக்ட்ரிக் மொபெட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த இ-லூனா மொபெட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபெட்டின் மோட்டார் திறன் மற்றும் பேட்டரி திறன் தொடர்பான விவரங்களை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. நகர்புறங்களுக்கு மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இந்த மொபெட்டுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள கைனடிக் கிரீன் தொழிற்சாலையில் இந்த வாகனம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

முதல் கட்டமாக 5,000 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இதில் 3 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதலாவதாக 2 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது அதிகபட்சமாக 80 கி.மீ தூரம் வரையிலும், 1.5 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது 40 முதல் 45 கிமீ தூரம் வரையிலும், 3 கிலோவாட் பேட்டரி கொண்டது 100 முதல் 120 கி.மீ தூரம் வரை செல்லக்கூடியதாக இருக்கும் என நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்