மூணாறு அருகே நெடுஞ்சாலையில் யானைகள் உலா


மூணாறு: மூணாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீதியுலா வந்த யானைகள் கூட்டம், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கேரள மாநிலம் மூணாறில் உள்ள ஆனையிறங்கல் அணைக்கட்டு அருகே கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் யானைக்கூட்டம் ஒன்று ஜாலியாக உலா வந்தது. இதில் மூன்று குட்டிகளுடன் ஏழு யானைகள் நடத்திய இந்த வீதியுலாவை அவ்வழியே சென்ற சுற்றுலாப்பயணிகள் ஆச்சர்யம் கலந்த அச்சத்துடன் ரசித்தனர். மேலும் அவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாகவும் பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக யானைகள் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானவை. யானைக் குட்டிகளின் குறும்புத்தனம், யானைகள் கூட்டமாக குளிப்பது, கொஞ்சி குலாவுவது போன்றவை காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது மூணாறு அருகே யானைகள் மேற்கொண்ட நடைபயணமும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘சங்கரபாண்டியன் மேட்டில் இருந்து யானைகள் ஆனையிறங்கல் வனப்பகுதிக்கு சாலையைக் கடந்து சென்றுள்ளன. அவற்றால் யாருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை’’ என்றனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்